படப்பிடிப்பில் நடிகரை கம்பை கொண்டு வெளுத்த ஐஸ்வர்யா ராயின் மாமியார்! அபிஷேக் பச்சன் அம்மா இவ்வளவு கோபக்காரியா?
Aishwarya Rai mother in law scolded the actor with rice during the shoot Is Abhishek Bachchan mother really that angry
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதிகள், கடந்த சில மாதங்களாகவே விவாகரத்து வதந்திகளால் செய்திகளில் இடம் பிடித்திருந்தனர். ஆனால், இருவரும் அவற்றைத் திட்டவட்டமாக மறுத்து, தங்களது குடும்ப வாழ்க்கை சுமூகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், பச்சன் குடும்பத்தின் மூத்தவர் மற்றும் மூத்த நடிகையுமான ஜெயா பச்சன் குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளிவந்துள்ளது.
உலக அழகி பட்டம் வென்று இந்திய திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், தமிழ் சினிமாவின் ‘இருவர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக தொடங்கினார். பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தனது வாழ்க்கையில் சல்மான் கானுடன் காதல், பின்னர் விவேக் ஓபராயுடன் உள்ள உறவு போன்றவை பெரிய சர்ச்சையாக பேசப்பட்டன. இறுதியில், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
அபிஷேக் – ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இடையிலான வதந்திகளுக்குப் பின், பல ஊடகங்கள், ஜெயா பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இடையே உறவு பதட்டமாக உள்ளது எனச் செய்தி வெளியிட்டன. ஆனால், பச்சன் குடும்பம் இதை மறுத்தது.
இந்நிலையில், பாஜ்புரி சினிமாவின் பிரபல நடிகர் தினேஷ் லால் யாதவ், ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஜெயா பச்சனின் குணத்தை வெளிப்படுத்தும் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது:“‘கங்கா தேவி’ என்ற படத்தில் ஜெயா பச்சன் என் அம்மாவாக நடித்தார். கதைப்படி, நான் என் மனைவியை அறைய வேண்டும். அதை பார்த்து, அம்மா பாத்திரத்தில் இருந்த ஜெயா பச்சன், கம்பை எடுத்து என்னை அடிக்க வேண்டும். ஆனால், நடிப்பது போல இல்லாமல், உண்மையிலேயே என்னை இரண்டு முறை கம்பால் ஓங்கி அடித்துவிட்டார்.
நான், ‘ஜெயா ஜி, நீங்கள் உண்மையிலேயே அடிக்கிறீர்கள்!’ என்று கேட்டபோது, உடனே அவர், ‘நீ எப்படி என் மருமகளை அறையலாம்?’ என்று பதிலடி கொடுத்தார். அது வெறும் நடிப்பு என்று விளக்கினேன்,” என தினேஷ் லால் யாதவ் சிரித்தபடி கூறியுள்ளார்.
இந்த சுவாரஸ்ய சம்பவம், ஜெயா பச்சனின் தன்னுடைய கதாபாத்திரத்திற்கும், உணர்ச்சிகளுக்கும் எவ்வளவு உண்மையாக ஈடுபடுகிறார் என்பதையும், அவர் நேர்மையான குணத்தையும் வெளிப்படுத்துகிறது.
English Summary
Aishwarya Rai mother in law scolded the actor with rice during the shoot Is Abhishek Bachchan mother really that angry