இளநீரையே மிஞ்சும் 'மோர் பானம்' பத்தி தெரியுமா? உடலுக்கு அவ்வளவு நன்மை தரக்கூடியது..
Do you know about the whey drink that is better than water It is so beneficial for the body
உடலுக்கு நன்மை அளிக்கும் பானங்களில் மோர் முக்கியமானது. குடல் ஆரோக்கியம் (Gut Health) என்பது வெறும் செரிமானம் அல்ல; இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை ஆகியவற்றுடனும் தொடர்புடையது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல், கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற செயல்களில் முக்கிய பங்காற்றுகின்றன.
மோரின் நன்மைகள்:
குடல் ஆரோக்கியம்: லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா குடலுக்குத் துணைபுரியும்.
எலக்ட்ரோலைட் பானம்: உப்புடன் குடிப்பதால் உடலை நீரிழப்பு, எலக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும்.
செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உடலின் நச்சுநீக்கியாக செயல்படுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தம் குறைப்பதில் உதவும்.
இரத்தசோகைக்கு நல்லது.
எடையை கட்டுப்படுத்த உதவும், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
சருமத்திற்கும் நன்மை: தினசரி அருந்தினால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
மோர் ரெசிபி – எளிய மற்றும் சுவையானது:
தேவையானவை:
1 கப் தயிர்
சிறிது இஞ்சி துண்டுகள்
பச்சை மிளகாய் (காரம் அதிகம் விரும்பினால்)
மாங்காய் துண்டுகள் (புளிப்பு விரும்பினால்)
கொத்தமல்லி தளை, கருவேப்பிலை, உப்பு
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
-
தயிர், இஞ்சி, மிளகாய், மாங்காய் துண்டுகள், கொத்தமல்லி தளை, கருவேப்பிலை, உப்பை மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
-
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அடித்து கலக்கவும்.
-
வடிகட்டி பருகவும்.
சுவை அபாரம், உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
English Summary
Do you know about the whey drink that is better than water It is so beneficial for the body