தமிழகத்தில் வக்பு வாரியம் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது - அமைச்சர் நாசர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த 1995 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி தாக்கல் செய்தது. இந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ், ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என்று 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணையின் போது, வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில், புதிய வக்பு வாரிய சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது என்று தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை வக்பு வாரியம் சட்டம் திருத்தி அமைக்கப்படாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister nasar says no change in waqf boards in tamilnadu


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->