"தளபதியின் மகளிர் தின மெகா சீர்!": ₹2500 நிதி, 6 சிலிண்டர்கள், 1 பவுன் தங்கம் - விஜய் அதிரடி!
TVK Mega Promises for Women 2500 Monthly 6 Free Cylinders and Wedding Gold
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மகளிர் தின விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெண்களின் மனதை வெல்லும் வகையில் மூன்று பிரம்மாண்டத் தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்துள்ளார்.
சாதனையாளர்களுக்குக் கௌரவம்:
இந்த விழாவில், த.வெ.க. பெண் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த சாதனைப் பெண்களுக்கு 'வேலு நாச்சியார் - பெண்மையின் பேராண்மை' என்ற புத்தகத்தையும், கைக் கடிகாரத்தையும் விஜய் பரிசாக வழங்கினார்.
மகளிர் நலனுக்கான 3 மெகா வாக்குறுதிகள்:
மாதாந்திர ₹2500 உதவித்தொகை: அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் தவிர்த்து, மற்ற அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ₹2,500 நிதி உதவி வழங்கப்படும்.
அன்னபூர்ணி சூப்பர் சிக்ஸ்: இல்லத்தரசிகளின் சுமையைக் குறைக்க, ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்படும்.
அண்ணன் சீர் திட்டம்: இது ஒரு நெகிழ்ச்சியான அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது. "தாய் வீட்டிலிருந்து வரும் அண்ணன் சீர்" போல, திருமணத்தின் போது பெண்களுக்குத் தரமான பட்டுச் சேலையுடன், ஒரு பவுன் தங்கம் சீதனமாக வழங்கப்படும் என விஜய் உறுதி அளித்துள்ளார்.
English Summary
TVK Mega Promises for Women 2500 Monthly 6 Free Cylinders and Wedding Gold