மதுரை மத்திய தொகுதி: பி.டி.ஆர்-க்கு எதிராகக் குவியும் விருப்ப மனுக்கள்! சபரீசன் நடத்திய 'சமாதான' பேச்சு?!
Intense Rivalry for Madurai Central Seat Sabareesan Steps in to Back PTR
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR) ஹாட்ரிக் வெற்றிக்குக் குறிவைத்துள்ள நிலையில், அவருக்குச் சொந்தக் கட்சியினரே கடும் சவாலாக மாறியுள்ளனர்.
விருப்ப மனுக்களும்... உட்பூசலும்!
40+ போட்டியாளர்கள்: 2016 மற்றும் 2021-ல் வென்ற பி.டி.ஆர் 3-வது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார். இவருடன் முன்னாள் மேயர் குழந்தைவேலு, ஜி.பி.ராஜா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் இதே தொகுதியைக் கேட்டு விருப்ப மனு அளித்துள்ளனர்.
அதிர்ச்சி வைத்தியம்: அமைச்சருக்கு எதிராக 15-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பகிரங்கமாக மனு அளித்துள்ளது கட்சி வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விருப்ப மனு என்பது வெறும் 'கண் துடைப்பு' நடவடிக்கை எனச் சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வரும் சூழலில், கட்சிக்குள் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
சபரீசனின் அதிரடித் தலையீடு:
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி மோதலால், தேர்தலில் 'உள்ளடி' (Internal Sabotage) வேலைகள் நடக்க வாய்ப்புள்ளதாகத் தலைமை அஞ்சுகிறது.
இதைச் சரிசெய்ய, சமீபத்தில் மதுரை வந்த முதலமைச்சரின் மருமகன் சபரீசன், மாநகர் செயலாளர் தளபதி மற்றும் முக்கிய நிர்வாகிகளைத் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். "பி.டி.ஆர் தான் வேட்பாளர்; அவரது வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என அவர் கறாராக உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
English Summary
Intense Rivalry for Madurai Central Seat Sabareesan Steps in to Back PTR