தவெக தலைவர் விஜய்யுடன் சென்ற பவுன்சர்கள் வாகனம் விபத்து.!!
tvk leader vijay bouncers vehicle accident
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற அவர் அங்கிருந்து பிரசார பேருந்தில் சாலை மார்க்கமாக நாமக்கல் செல்கிறார். இந்த பிரச்சார வாகனத்தை தொடர்ந்து தொண்டர்கள், ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், விஜய்யின் பவுன்சர்கள், செய்தியாளர்கள் என்று அனைவரும் செல்கின்றனர்.
அப்படி செல்லும் போது விஜய்யின் பவுன்சர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதாவது, முன்னால் சென்ற மற்றொரு காரின் மீது பவுன்சர்கள் சென்ற கார் மோதியது. இதில், பவுன்சர்கள் சென்ற காரின் முன் பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது. ஆனால்,எதிர்பாராதவிதமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
English Summary
tvk leader vijay bouncers vehicle accident