இறைநம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சியாக திமுக அரசு - முக ஸ்டாலின் பெருமிதம்!
MK Stalin Say About Hindu Temple 2023
இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக, முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளமான டிவிட்டரில் நெட்டிசன் ஒருவர், "மு க ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றோடு 856 நாட்களாகிறது.
1000 ஆவது கோயில் கும்பாபிஷேகத்தை செப்.,10 அன்று மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்த்துகிறது இந்து சமய அறநிலையத்துறை.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் சராசரியாக தினம் ஒரு கோயிலில் குடமுழுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
கோயில் நிலங்களை மீட்டது, கோயில் சொத்துக்களை முறைப்படுத்தியது, நிர்வாக சீர்கேடுகளை களைந்தது என பி.கே. சேகர் பாபு அமைச்சராக இருப்பது அறநிலையத்துறையின் பொற்காலம்" என்று பதிவிட்டிருந்தார்.
இதனை ரீடிவிட் செய்துள்ள முதலான்ச்சர் முக ஸ்டாலின், ''எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிடின் மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்துசமய அறநிலைத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.
5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.
இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.
இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்குக் காரணமான அமைச்சர் சேகர்பாபு அவர்களையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதியின் சனாதன பேச்சுக்குப்பின், இந்து மதத்தை திமுக அழிக்க நினைப்பதாக பாஜக தரப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், முதலமைச்சரின் இந்த டிவிட்டர் பதிவு, அந்த விமர்சனங்களை சமாளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் அவருக்கு பதிலளித்து வருகின்றனர்.
English Summary
MK Stalin Say About Hindu Temple 2023