மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு முக்கிய வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றியடைந்துள்ள நிலையில், 7 ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கொரோனா நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்றி நாம் செயல்பட வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது மக்களின் நன்மைக்கு என புரிந்துகொண்ட அனைவரும் செயல்பட வேண்டும். 

அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் தங்களுக்கு தாங்களே போட்டுக்கொள்ளும் நடைமுறையுடன் கட்டுப்பாடாக நடக்க வேண்டும். கொரோனாவின் பரவல் சங்கிலியை முறிக்காமல், அதனை அளிக்க இயலாது. ஆகையால் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

முதல் கொரோனா பரவலை விட இரண்டாம் அலை பரவல் அதிகமாக உள்ளது. இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் " என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin Request to TN Peoples about Corona Rules 4 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal