6 வயதில் காணாமல் போன மாணவி 9 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு! அதிகாரிகளின் நெகிழ்ச்சி செயல்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை, வந்தவாசி அடுத்துள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் மரம் வெட்டும் தொழிலாளி. 

இவரது மனைவி சின்னபாப்பா. இவர்களுக்கு 5 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். இவர்களின் கடைசி மகள் பிரியா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். 

பெற்றோர் பல்வேறு இடங்களில் மகளை தேடினர். மகளின் புகைப்படம் எதுவும் இல்லாததால் போலீஸிடம் புகார் அளிக்க விவரம் தெரியவில்லை. 

இதற்கிடையே பிரியாவை 6 வயது சிறுமியாக இருந்த போது ஒரு பெண் மீட்டு ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்தார். 

ஆனால் அந்த காப்பகம் உரிமம் இன்றி இயங்கியதால் அங்கிருந்த குழந்தைகள் எல்லாம் வேலூர் ஆலாபுரத்தில் உள்ள பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். 

அங்கு வளர்ந்த பிரியா 10 ஆம் வகுப்பு வரை படித்தார். அவனுக்கு பெற்றோரின் நினைவுகளும் அவரது சொந்த ஊர் நினைவுகளும் வந்து கொண்டிருந்தது. இதனைப் பற்றி காப்பகத்தில் உள்ள அதிகாரியிடம் அடிக்கடி தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து காப்பகத்தில் உள்ள அதிகாரிகள் பிரியாவின் சொந்த ஊருக்கு சென்று அவரது பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து பின்னர் பிரியாவின் பெற்றோர்கள் அவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டு பின்னர் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். 

இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பிரியாவிற்கும் அவரது பெற்றோருக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டு பிரியாவின் பெற்றோர்கள் அவர்கள் தான் என இதன் மூலம் நிரூபிக்கப்பட்டது. 

பின்னர் இது குறித்து வேலூர் நீதிமன்றத்தில் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு நீதிபதியின் உத்தரவின் படி பிரியாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

பிரியாவுக்கும் அவரது பெற்றோருக்கும் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டு ஆனந்த கண்ணீருடன் பெற்றோருடன் சேர்த்து வைத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து பிரியா பெற்றோருடன் சொந்த ஊர் சென்றார். இது குறித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Missing 6 year old girl found after 9 years


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->