சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்தின் மெகா அதிரடி..! சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்...! - முழு விவரம்! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 23 இடங்கள் காலியாக இருப்பதால், அந்த வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025-ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் பணியாற்றி வந்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன் மற்றும் குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று, சட்டத்துறையில் அனுபவம் மிக்க வழக்கறிஞர்களான என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை மற்றும் ஆர்.அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் நீதிபதி நியமனத்திற்காக முன்மொழியப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த 19 பேரின் பெயர்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை விரைவில் வெளியிடுவார் என நீதித்துறை வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mega move by Supreme Court Collegium 19 new judges Madras High Court Full details


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->