மழை வெள்ளம் - 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்.!
medical camp to seven districts in tamilnadu
வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே தற்போது கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை ஏழு மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
English Summary
medical camp to seven districts in tamilnadu