இல்லம் தேடி மருத்துவ முகாம்.. சிகிச்சை பெற்ற மாணவ,மாணவிகள்! - Seithipunal
Seithipunal


செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடந்த இல்லம் தேடி மருத்துவ முகாமில் 100க்கு மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

பந்தலூர் டியூஷ் மேல்நிலை பள்ளியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் இல்லம் தேடி மருத்துவம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம்,  பள்ளி நிர்வாகம் ஆகியன இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுதிந்திரநாத் தலைமை தாங்கினார்.கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துகுமார், செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தகுருஷ் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில்மருத்துவர் ஜெயினப் பாத்திலா தலைமையிலான 
மருந்தாளுணர்நவீன், செவிலியர் சுமதி, நிர்வாக உதவியாளர்கள் லாய்ஷான் ஆகியோர் அடங்கிய மருத்துவ  குழுவினர் பொது மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

முகாமில் 100க்கு மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Medical camp in search of homes Students who received treatment


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->