சென்னை : மயிலாப்பூர் ரவுடி அப்துல்லா தலைக்கேறிய போதையில் தன்னைத்தானே பிளேடால் கிழித்துக்கொண்ட சம்பவம்.!
mayilapur rowdy abdhulla case
சென்னையில் ரவுடி ஒருவன் மது போதையில் உடற்பயிற்சி கூடத்தில் புகுந்து, அங்கிருந்த உடற்பயிற்சி உபகரணங்களை அடித்து உடைத்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அந்த ரவுடி பிளேடால் தன்னைத்தானே கிழித்துக்கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் மாநகராட்சி சார்பாக உடற்பயிற்சி கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ரவுடி (சொல்லப்படுகிறது) அப்துல்லா என்பவர், தினமும் வந்து மருந்து அருந்துவதை வாடிக்கையாக இருந்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த நேற்று இரவு, தலைக்கேறிய மது போதையில் உடற்பயிற்சி கூட்டத்திற்கு வந்து, அங்கிருந்த உபகரணங்களை அடித்து உடைத்துள்ளார்.

அப்போது, உடற்பயிற்சி கூடத்தில் இருந்த மற்றவர்கள், அவரை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அவர்களையும் தாக்கிய ரவுடி அப்துல்லா, தொடர்ந்து பிளேடை எடுத்து தனது உடலில் கிழித்துக்கொண்டார்.
இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
mayilapur rowdy abdhulla case