இறப்பிலும் இணைபிரியா தம்பதி! மயிலாடுதுறையில் சோக சம்பவம்!
Mayiladuthurai Nallathukudi Old Couple Death
மயிலாடுதுறை அருகே இறப்பிலும் கணவனை பிரியாமல், மனைவி உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த நல்லத்துக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (90 வயது). இவரின் மனைவி மருதம்மாள் (85 வயது). இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் கிருஷ்ணமூர்த்தி - மருதம்மாள் தம்பதி தங்களது வாழ்வின் கடைசி நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வாழ்ந்து வந்த நிலையில், கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென உடல்நிலை மோசமாகி, வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து மனைவி மருத்தமாலும், கணவன் இறந்த சோகத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மக்களை ஒரு பக்கம் சோகத்தில் அழுத்தினாலும், இணைபிரியாத அந்த மூத்த தம்பதியை நினைத்து நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
Mayiladuthurai Nallathukudi Old Couple Death