சாதி மறுப்பு காதல் திருமணம்! நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம் சூறை! - Seithipunal
Seithipunal


நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்து பிற்பகல் மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு நுழைந்த பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.

பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் வீட்டார் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் பலத்த பாதுகாப்பது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marxist communist office attacked in nellai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->