'தேர்தல் நேரம்... டெல்லி வர முடியாது'...! - சிபிஐ-யிடம் தவெக தலைவர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை...!
Election Time I Cannot Come Delhi TVK Leader Vijay Makes Bold Request CBI
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட நெரிசலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், ஏற்கனவே டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் மூன்று முறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மூன்றாவது கட்ட விசாரணையில் சுமார் 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை எழுப்பினர். இதுவரை நடந்த அனைத்து விசாரணைகளுக்கும் சட்டத்திற்கு உட்பட்டு முழு ஒத்துழைப்பு வழங்கியிருப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் காலம் நெருங்கி வருவதால், வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரப் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதனால் அடிக்கடி டெல்லிக்கு வந்து செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அடுத்தகட்ட விசாரணைகளைத் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திலேயே நடத்த அனுமதிக்குமாறு விஜய் தரப்பில் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பணிகளைத் திட்டமிட வேண்டியுள்ளதால், இந்தக் கோரிக்கையைச் சி.பி.ஐ. பரிசீலிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Election Time I Cannot Come Delhi TVK Leader Vijay Makes Bold Request CBI