ஆக்ரோஷப் பேச்சு!!! திமுக-வுக்குப் பெண்கள் வெறும் ஓட்டு வங்கி தான்....! - கோவையில் நடிகை கவுதமி
DMK Women Merely Vote Bank Actress Gautami Coimbatore
கோவையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட நடிகை கவுதமி, ஆளுங்கட்சியையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாகச் சாடிப் பேசினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெண்களின் முன்னேற்றத்திற்காகவே வாழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டிய அவர், தற்போதைய திமுக அரசு பெண்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்ப்பதாகக் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, 28 மாதங்கள் கழித்து மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவதையும், மாணவர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக மாறிய பிறகு அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுவதையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் தற்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கவுதமி, விளாத்திகுளம் வன்கொடுமை சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி-யின் கருத்து மனிதத்தன்மையற்றது என்றும், பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று ஆறுதல் கூறக் கூட முன்வராதவர்கள் தங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப்பொருள் பரவலால் அடுத்த இரு தலைமுறைகளும் சீரழிந்துள்ளதே திமுக ஆட்சியின் 'பெருமை' என விமர்சித்த அவர், வரும் சட்டசபை தேர்தலில் போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக இடையே மட்டுமே நேரடியாக இருக்கும் என்றும், மற்றவர்கள் இடையில் வந்த 'தொல்லைகள்' போன்றவர்கள் என்றும் அதிரடியாகத் தெரிவித்தார்.
English Summary
DMK Women Merely Vote Bank Actress Gautami Coimbatore