காதலித்து கரம் பிடித்த சில மாதங்களிலேயே விபரீதம்...! - இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை! அதிர்ச்சியில் பெற்றோர்...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து ஒன்றரை வயது குழந்தையுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த இளம்பெண் வீட்டிலேயே தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புக்கு கணவர் மற்றும் மாமியாரின் தொடர் மனஉளைச்சலே காரணம் என புகார் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி பிரையண்ட்நகர் 12-வது தெருவைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகன் மீனாட்சிசுந்தரம் (26), கடந்த 2023-ஆம் ஆண்டு மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகள் மகாலட்சுமி (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, கணவரின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த மகாலட்சுமியின் இல்லற வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட அடிக்கடி தகராறுகள் காரணமாக அவர் கடுமையான மனவேதனையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கணவர் மற்றும் மாமியார் இருவரும் தொடர்ந்து மனரீதியான தொந்தரவு அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆழ்ந்த விரக்தியடைந்த மகாலட்சுமி, தனது படுக்கையறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு, மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் தட்டியுள்ளனர். எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகாலட்சுமி தூக்கில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இதையடுத்து உடனடியாக தகவலறிந்த தென்பாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில், மகாலட்சுமியின் தாயார் சுப்புலட்சுமி அளித்துள்ள புகாரில், "எனது மகள் கணவர் மற்றும் மாமியார் அளித்த தொடர்ச்சியான மனஉளைச்சலை தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. முழுமையான விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், திருமணமாகி மூன்று ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் இளம்பெண் உயிரிழந்துள்ளதால், சட்ட நடைமுறையின்படி கோட்டாட்சியர் பிரபுவும் தனித்த விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy struck just few months after falling love Young woman commits suicide by hanging herself Parents shock


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->