வேலைதேடும் இளைஞர்களுக்கு மெகா குட் நியூஸ்...! ரூ.1,000 கோடி முதலீட்டில் களமிறங்கும் ஹிட்டாச்சி... 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை உயர்தர தொழில்நுட்ப முதலீடுகளின் முன்னணி மையமாக மாற்றும் முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ஹிட்டாச்சி குழுமத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரம் உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் ஆற்றல் நிறுவனங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள ஹிட்டாச்சி குழுமம், உலகளாவிய பார்ச்சூன்–500 நிறுவனங்களின் வரிசையில் திகழ்கிறது.

இக்குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள், மின்சாரம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறைகளில் முன்னோடியான சேவைகளை வழங்கி வருகின்றன.இந்தச் சூழலில், இன்று (07.07.2026) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் ரூ.1,000 கோடி முதலீட்டில் சென்னை போரூரில் செயல்பட்டு வரும் ஹிட்டாச்சி குழுமத்தின் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதேவேளையில், செங்கல்பட்டில் அமைந்துள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தித் திறனும் குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கப்பட உள்ளது.

இந்தப் பெரும் முதலீட்டுத் திட்டத்தின் மூலம் சுமார் 1,000 உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி, மேம்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் திறன்மிக்க மனிதவள உருவாக்கத்திற்கு இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான தீபக் ஜேக்கப், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி, தலைமை வளர்ச்சி அலுவலர் கார்த்திக் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களும், நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mega good news job seekers Hitachi launch investment 1000 crore Job opportunities 1000 people


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->