நேட்டோ-வுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை...! - ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அதிபர் டிரம்ப் ஆவேசம்!
NATO Final Warning President Trump Lashes Out Over Strait Hormuz Issue
மேற்கு ஆசியப் போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளதால் சர்வதேச அளவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்க்க சீனா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 7 நாடுகள் ஒன்றிணைந்து ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்கத் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் இதில் உதவாவிட்டால் நேட்டோ (NATO) அமைப்பிற்கு மிகவும் மோசமான எதிர்காலம் அமையும் என்று அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். உக்ரைன் போரின் போது அமெரிக்கா உதவியது போல, தற்போது ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்று டிரம்ப் தனது இறுதி எச்சரிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், டிரம்ப்பின் இந்த வேண்டுகோளைப் பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கள் கடற்படைப் பிரிவு மத்தியதரைக் கடலிலேயே நீடிக்கும் எனப் பிரான்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், மோதல் போக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
அதேபோல், ஜப்பான் தனது முடிவுகளைத் தன்னிச்சையாகவே எடுக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இது குறித்து இன்னும் தெளிவான முடிவை அறிவிக்காத நிலையில், டிரம்பின் இந்த அதிரடி எச்சரிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
NATO Final Warning President Trump Lashes Out Over Strait Hormuz Issue