துபாய் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்...! - எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்ததால் விமான நிலையம் மூடல்...! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, துபாய் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் இன்று அதிரடி ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், துபாய் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனால் எமிரெட்ஸ் நிறுவனம் தனது அனைத்து விமானச் சேவைகளையும் ரத்து செய்துள்ளதுடன், இந்தியாவில் இருந்து சென்ற சில விமானங்கள் பாதியிலேயே திருப்பி விடப்பட்டன.

இதேபோல், ஈராக்கின் பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் குடியிருப்புகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருவதால், பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

தற்போது துபாயில் நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேசப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran Launches Drone Attack on Dubai Airport Closed Oil Depot Catches Fire


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->