கன்னியாகுமரியில் பரபரப்பு - மது அருந்த வந்த திருநங்கையிடம் சில்மிஷம் செய்த நபர்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் பரபரப்பு - மது அருந்த வந்த திருநங்கையிடம் சில்மிஷம் செய்த நபர்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லையோரப் பகுதியான கோழிவிளை பகுதியில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மதுவாங்க வரும் நபர்கள் மது வாங்கியபின் சாலைகளின் இருபுறங்களிலும் அமர்ந்து மது குடிக்கின்றனர். 

அப்போது ஒரு சிலர் போதை தலைக்கேறிய பின் அங்கேயே படுத்து தூங்கவும் செய்கின்றனர். அவர்களில் ஒருசில குடிமகன்கள் அங்கு மது அருந்த வரும் திருநங்கைகளின் மடியில் படுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், திருநங்கை ஒருவரின் மடியில் படுத்திருக்கும் ஒரு நபரை மற்றொரு நபர் தாக்கி சாக்கடையில் தள்ளிவிட்டு இருவரும் கற்களை கொண்டு மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

இதைப்பார்க்கும் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சமூக ஆர்வலர்கள் "போலீஸார் கண்டு கொள்ளாமல் இருப்பதே இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற காரணம்" என்று வேதனை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man sexuall harassment to transgender woman at bar in kanniyakumari


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->