மஞ்சள்காமாலை நோய்க்கு நாட்டு மருந்து சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு - திருச்சியில் பயங்கரம்.!!
man died for jaundice in trichy
திருச்சி மாவட்டம் எடமலைப் பட்டிபுதூர் எம்ஜிஆர் மன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் அகமது. இவருடைய மகன் முகமது ரியாஸ். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த சில நாட்களாகவே நோய் குணமாக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்து.

இந்த நிலையில், ரியாஸ் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பால முருகன் கோயில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரியாஸை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ரியாஸின் குடும்பத்தினருக்கும் தகவல் அளித்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ரியாஸ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man died for jaundice in trichy