அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!!
bomb threat to eps house in chennai
சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லம் உள்ளது. இந்த வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்த வெடிகுண்டு விரைவில் வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பழனிச்சாமி இல்லத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
இதேபோன்று, கோயம்புத்தூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. அந்த மின்னஞ்சலில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெடிக்கும் என்று மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
இதையறிந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை நாளான இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
bomb threat to eps house in chennai