பாஜகவின் வாக்கு திருட்டு குஜராத்தில் இருந்து தான் ஆரம்பமாகியுள்ளது - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு.!!
ragul gandhi speech about bjp in bihar rally
பீகாரில் ராகுல் காந்தி தலைமையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வாக்குத் திருட்டுக்கு எதிரான பேரணியை நடத்தி வருகின்றனர். அதன் படி இன்று நடைபெற்ற பேரணியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொண்டார். இந்த நிலையில், பேரணியின் போது ராகுல் காந்தி தெரிவித்ததாவது:
"குஜராத்தில் சில பெயர் தெரியாத கட்சிகள் உள்ளன. ஆனால், அந்த கட்சிகள் ரூ. 4,300 கோடி மதிப்புள்ள நன்கொடைகளைப் பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் மிகக் குறைந்த தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டுள்ளன. குறைவாகவே செலவிட்டுள்ளன.

இந்த ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன? கட்சிகளை யார் நடத்துகிறார்கள்? பணம் எங்கே போனது? தேர்தல் ஆணையம் விசாரிக்குமா? அல்லது இங்கும் பிரமாணப் பத்திரங்களைக் கேட்குமா? அல்லது இந்த முறையும் மறைக்கும் வகையில் சட்டத்தையே மாற்றுமா?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், வாக்குத் திருட்டை குஜராத்திலிருந்து தான் பாஜக ஆரம்பித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், பாஜக இன்னும் 40-50 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருக்கும் என்று பேசினார். அப்போது, நான் ஆச்சரியப்பட்டேன். பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடுவதால் அவர் அவ்வாறு சொல்லியிருக்கலாம்” என்று தெரிவித்தார்.
English Summary
ragul gandhi speech about bjp in bihar rally