'2030 காமன்வெல்த் போட்டிகள்': இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
Union Cabinet approves hosting of 2030 Commonwealth Games in India
தலைநகர் டில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2030-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு உரிமை கோருவதற்கான முன்மொழிவை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் முன்மொழிந்தது. இந்த உரிமை கோரலுக்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்க, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதனை நடத்துவதற்கான ஒப்பந்தம் மற்றும் குஜராத் அரசு நிதி உதவி வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டிகளை நடத்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஆமதாபாத்தில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. அத்துடன், 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல் நடந்த மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானமும் அமைந்துள்ளது.
இதற்கிடையே, அண்மையில் காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் ஆமதாபாத்தில் ஆய்வு செய்துள்ளதோடு, குஜராத் அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளனர். காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Union Cabinet approves hosting of 2030 Commonwealth Games in India