வரிவிதிப்பு: இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்..!
There are reports that talks are underway between India and the US regarding taxation
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்பட்டுள்ளதால் வர்த்தகர்களிடையே பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரி விதிப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த அதிரடி வரிவிதிப்பு செயல் உலக நாடுகளுக்கு மட்டுமின்றி, அமெரிக்க மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மீது அடுத்தடுத்த வரி விதிப்புகளால் இருநாடுகளிடையே உள்ள பரஸ்பரம் மற்றும் நல்லுறவு சீர்கெட்டதுடன், அவநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

குறித்த வரிவிதிப்பில் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு மேற்கொண்டு வருகிகின்ற நிலையில், பிற உலக நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சிகளை முழு வீச்சில் வர்த்தகத்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், வரி விதிப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டில்லி அரசு வட்டார தகவல் தெரிவிக்கின்றன. குறித்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படும் பட்சத்தில், இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பின் ஒரு பகுதி ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
There are reports that talks are underway between India and the US regarding taxation