எமனாக மாறிய ஓபன்ஏஐ: சாட்ஜிபிடி உதவியுடன் தற்கொலை செய்துகொண்ட அமெரிக்க சிறுவன்: பெற்றோர் குற்றசாட்டு..!
US parents sue ChatGPD for aiding boy suicide
அமெரிக்காவை சேர்ந்த ஆடம் ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டுள்ளான். குறித்த சிறுவன், சாட்ஜிபிடி உரையாடலில் தீவிரமாக இருந்துள்ள நிலையில், அவனது சாட்ஜிபிடி உரையாடல்களை பெற்றோர் பார்வையிட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாட்ஜிபிடி மூலம் தற்கொலைக்கான வழிமுறைகளை அவன் தேடியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தங்கள் மகன் தற்கொலைக்கு உதவியதாக, ஓபன்ஏஐ நிறுவனம் மீது சிறுவனின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகின்ற நிலையில், வழக்கை எதிர்கொண்டுள்ள ஓபன்ஏஐ நிறுவனம், புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஓபன்ஏஐ வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: மக்களுக்கு மிகவும் தேவைப்படும் போது அவர்களுக்கு உதவுதல் என்ற தலைப்பில், பயனர்கள் சுய-தீங்கு போன்ற முக்கியமான பிரச்னைகள் பற்றி பேசும் போது சாட்ஜிபிடி-ஐ மிகவும் பொறுப்பானதாக மாற்றுவதற்கு எங்களது நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சாட்பாட், மக்களை உதவியை நோக்கி வழி நடத்த வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நீண்ட உரையாடல்களின் போது அதன் பாதுகாப்புகள் பலவீனமடையக்கூடும் என்றும், சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும் பதில்களை உருவாக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
அத்துடன், பயனர்கள் தற்கொலை பற்றிப் பேசும்போது ஏற்படும் உரையாடல்களைத் தணிக்க, அதன் சமீபத்திய ஜிபிடி-5 மாடலுக்கான புதிய அம்சங்களை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நெருக்கடி நிலையை அடைவதற்கு முன், சான்றளிக்கப்பட்ட சிகிச்சையாளர்களுடன் மக்களை நேரடியாக இணைப்பதற்கான வழிகளையும் ஆய்வு செய்து வருகிறதகாகவும், சாட்ஜிபிடி மூலம் பயனர்கள் அணுகக்கூடிய உரிமம் பெற்ற நிபுணர்களின் வலையமைப்பு என்பது விவாதத்தில் உள்ள மற்றொரு யோசனையாகும் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், டீனேஜர்களுக்கு, பெற்றோர் தங்கள் குழந்தைகள் சாட்பாட் ஐ எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க, பெற்றோர் கட்டுப்பாடுகளை அனுமதிக்க தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், பாதிக்கப்படக்கூடிய பயனர்களை குடும்பத்தினருடனோ அல்லது நெருங்கிய நண்பர்களுடனோ இணைக்கக்கூடிய அம்சங்களையும் செய்ய திட்டமிட்டுள்ளதாக
ஓபன்ஏஐ பதிவிட்டுள்ளது.
English Summary
US parents sue ChatGPD for aiding boy suicide