சோகம்.. ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி.!
30 peoples died for land slide in jammu kashmir
ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி முப்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வர் மற்றும் தோடா ஆகிய மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்தது. இந்தக் கனமழையால் திரிகூட மலையின் உச்சியில் உள்ள புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றுக் கருதப்படுகிறது. இந்த நிலச்சரிவால் பக்தர்கள் கோயிலுக்குப் பயணம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-ஸ்ரீநகர், கிஷ்துவார்-தோடா தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்துத்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
30 peoples died for land slide in jammu kashmir