தணிக்கை தடையில் சிக்கிய ‘ஜன நாயகன்’ – ரிலீஸ் ஒத்திவைப்பு, மாரி செல்வராஜ் கடும் கண்டனம் - Seithipunal
Seithipunal


ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ‘ஜன நாயகன்’, நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில், தணிக்கைச் சான்று வழங்கப்படாத காரணத்தால் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தி மற்றும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், ஒரு முக்கியமான திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்க தாமதம் ஏற்பட்டிருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ தணிக்கை விவகாரம் தொடர்பாக, இயக்குநர் மாரி செல்வராஜ் மத்திய தணிக்கைத்துறையை கடுமையாக விமர்சித்து, தனது எக்ஸ் (X) சமூக வலைதள பக்கத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில்,“‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி.ஒரு படைப்பாளி என்ற முறையில், இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம், நம் ஜனநாயகத்திற்கும், நம் படைப்பு சுதந்திரத்திற்கும் வேகமாக பரவும் பேரச்சத்தை துடைத்தெறிய, நாம் அனைவரும் பெருங்குரல் எழுப்ப வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jana Nayagan caught censorship issues Release postponed Mari Selvaraj strongly condemns


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->