துருக்கர் படையெடுப்பை எதிர்த்த மாவீரர்களின் தியாகமும்,வீரமும்; வெளியானது திரௌபதி 2 படத்தின் ட்ரெய்லர்..!
Draupathi 2 Official Trailer released
''பழைய வண்ணாரபேட்டை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்திய படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. அதனை தொடர்ந்து நன்கு ஆண்டுகளுக்கு பின்னர் 2020-ஆம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு மத்தியில் மோகன் ஜி-க்கு வெற்றிப் படமாக அமைந்தது.
அடுத்ததாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் மோகன் ஜி திரௌபதி 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திலும் முதல் பாகத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரலாற்று புனைவாக இந்த உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் இன்னும் வழங்காத நிலையில், படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போடுகிறது. இந்த நிலையில், திரௌபதி 2 படத்துக்கு எளிதாக தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், ஜநாயகனுக்கு கிடைக்கவில்லை என்பதால், சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
English Summary
Draupathi 2 Official Trailer released