பராசக்தி மொழிப்போரின் ரத்த சாட்சியா? மரண மொக்கையா?!
Parasakthi Movie Review
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம் இன்று (ஜனவரி 10, 2026) வெளியானது.
1965-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தையும் இப்படம் ஆவணப்படுத்த முயற்சி செய்துள்ளது படக்குழு.
கதைச் சுருக்கம்:
ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர் படையை வழிநடத்தும் செழியன் (சிவகார்த்திகேயன்), ஒரு பேரிழப்பிற்குப் பின் போராட்டத்திலிருந்து ஒதுங்குகிறார். சில ஆண்டுகள் கழித்து, அவரது தம்பி சின்னத்துரை (அதர்வா) அதே லட்சியத்திற்காகக் களமிறங்க, அண்ணன்-தம்பிக்கு இடையே நடக்கும் தர்க்கங்களும், மொழி உரிமையை மீட்கும் போராட்டமுமே படத்தின் கதை.:
சிவகார்த்திகேயன் அரசியல் பின்னணி கொண்ட கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். அதர்வா ஆக்ரோஷமான வசனங்களில் கவனம் ஈர்க்கிறார். வில்லனாக ரவி மோகன் மிரட்டுகிறார். சொல்லப்போனால் ரவி மோகனுக்காக இன்னும் ஒருமுறை படத்தை பார்க்கலாம். ஸ்ரீலீலாவுக்கு நடிக்கப் போதுமான வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொழில்நுட்பம்: ஜி.வி. பிரகாஷின் 100-வது படம், பின்னணி இசையில் உணர்ச்சிகளைக் கடத்துகிறது. 1960-களின் சூழலை (ரயில் நிலையங்கள், உடைகள்) அப்படியே கண்முன் நிறுத்த முயற்சி செய்துள்ளது படக்குழு.
இயக்கம்: சுதா கொங்கரா ஒரு வரலாற்றுச் சம்பவத்தைச் சிதைக்காமல் ஆவணப்படுத்தியுள்ளதாக சொல்லப்பட்டாலும், பல எதிர்கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
தணிக்கைத் துறையின் பல 'மியூட்' மற்றும் வெட்டுகளையும் தாண்டி, "மொழி என்பது வெறும் சொல் அல்ல, அது நம் உரிமை" என்பதை இப்படம் உரக்க சொல்ல முயற்சி செய்துள்ளது.
படத்திற்கு எழும் எதிர்மறை விமர்சனங்கள்:
குறிப்பாக திரைக்கதை வேகம் இல்லை என்றும், முதல் பாதியில் வரும் காதல் காட்சிகள் கதையின் வேகத்திற்குச் சற்றுத் தடையாக உள்ளதாகவும் ரசிகர்கள் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.
இன்னும் சிலர் படம் படு மோசம், சமோசா, பாப்கான் சூப்பர் என்றும் பேட்டி கொடுத்து வருகின்றனர் .