பொங்கல் ரேஸில் களமிறங்கியுள்ள 04 படங்கள்; ஜனவரி 15, ரீ-ரிலீஸ் ஆகும் விஜய்யின் தெறி..!
The 4 films that have entered the Pongal race and Vijays Theri which is being re released
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் 25 வது படமான 'பராசக்தி' படம் இன்று வெளியாகி வெற்றிநடை போடுகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த 'ஜன நாயகன்; படம் 09 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது.
ஆனால், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் 'ஜனநாயகன் 'படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது.சிவகார்திகேயனின் 'பராசக்தி' இன்று திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மீதமுள்ள விடுமுறை நாட்களை பங்கிட்டுக் கொள்ளும் விதமாக, மேலும் 04 படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அந்த வகையில் கார்த்தியின் 'வா வாத்தியார்' ஜனவரி 14-ஆம் தேதியும், ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்', மோகன் ஜியின் 'திரௌபதி 2', விஜய்யின் 'தெறி' ரீ-ரிலீஸ் ஆகியவை 15-ஆம் தேதியும் வெளியாகவுள்ளன.
English Summary
The 4 films that have entered the Pongal race and Vijays Theri which is being re released