நீதிமன்றத்திலேயே போக்ஸோ குற்றவாளி செய்த செயல்.! அதிர்ச்சியில் போலிசார்.!
Man arrested pocso act and dead
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் அருகே உள்ள பொட்டல்பட்டி கிராமத்தில் சுடலை என்பவர் கூலி தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர்.
ஆனால், இருவருமே அவரை விட்டு பிரிந்ததால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அவர் அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சுடலையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில் இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு பத்தாயிரம் அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர். தீர்ப்பு வந்த நாளில் சுடலை நீதிமன்ற வளாகத்திலேயே மறைத்து வைத்திருந்த விஷம் கலந்த குளிர்பான பாட்டிலை எடுத்துக் கொடுத்து மயங்கியுள்ளார்.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
English Summary
Man arrested pocso act and dead