சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த மலேசிய பெண் - நடந்தது என்ன?
maleysia woman argument to Customs Officers in chennai airport
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த மலேசிய பெண் - நடந்தது என்ன?
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த வாரம் மலேசியாவில் இருந்து ஒரு தம்பதி, ஆன்மிக சுற்றுலா வந்தனர். அங்கு அவர்களுக்கு குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது, அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், "நீங்கள் இந்திய சுங்க விதிகளின்படி இல்லாமல் கூடுதல் நகைகளை அணிந்து வந்து உள்ளீர்கள். அதனால், அவற்றை கழற்றி தாருங்கள்" என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண், "நான் தாலி அணிந்துள்ளேன்.

அவற்றை கழற்றி தரமுடியாது" என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். அதன் பின்னர் அதிகாரிகள் அந்த பெண்ணின் கணவருடைய நகைகளை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு அவற்றை மலேசியாவுக்கு திரும்பி செல்லும் போது வாங்கி கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த பெண், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், "கணவருடன் மலேசியாவில் இருந்து ஆன்மீக சுற்றுலா செல்ல சென்னைக்கு வந்தேன். சென்னை விமான நிலையத்தில் சுமார் 2½ மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி கழுத்தில் அணிந்து இருந்த தாலியை கழற்ற சொன்னார்கள்.
நான் அவர்களுடன் வாக்குவாதம் செய்ததால் என் கணவரின் நகைகளை மட்டும் வாங்கி கொண்டனர். எவ்வளவு நகைகள் கொண்டு வரவேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது" என்றுத் தெரிவித்திருந்தார்.
English Summary
maleysia woman argument to Customs Officers in chennai airport