அட பாவிகளா.,கல்யாண பத்திரிக்கை போய் இப்ப முதலிரவுக்கும் பத்திரிக்கையா ?
'கட்டில் விளையாட்டு விழா'
மற்ற விழாக்களுக்கு பத்திரிக்கை அடிப்பது போல் முதலிரவுக்கு வாழ்த்து தெரிவித்து பத்திரிக்கை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நமது வீட்டு விழாக்களுக்கு வரவேற்கவும்,அவர்களுக்கு விழாவை பற்றிய தகவலை அளிக்கவும் பத்திரிக்கை அடித்து,உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுப்பது வழக்கம்.
மேலும் இந்த பத்திரிக்கை திருமணம், நிச்சயதார்த்தம்,காதணி விழா புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, 60ஆம் கல்யாண விழா, ஓய்வு பெறும் விழா போன்ற விழாக்களுக்கு அடிப்பது வழக்கம்.

ஆனால் அதற்கும் மேலாக திருமணம் முடிந்து முதலிரவுக்கு செல்லும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'கட்டில் விளையாட்டு விழா' என்ற அழைப்பிதழை மணமகனின் நண்பர்கள் அடித்துள்ளனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த பத்திரிகை சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
English Summary
making invitation for first night..,