மாணவிகளின் பாதுகாப்பில் பெரும் அதிர்ச்சி... விடுதியில் மது கொடுத்து பாலியல் வன்கொடுமை...! - 4 பேர் மீது நடவடிக்கை
major shock safety female students harassment hostel while giving them alcohol Action taken against 4 people
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு மாணவிகள் விடுதியில் தங்கியிருந்த 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, விடுதி காப்பாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.வாழப்பாடியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் தங்கி, அருகிலுள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த விடுதியில் ராதிகா என்ற 45 வயது பெண் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த 2 மாணவிகளை ராதிகாவின் நண்பர் ரகுபதி என்பவர் வெளியில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதியில் நடந்த சம்பவம் குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், தூய்மை பணியாளர் ராதிகா மற்றும் அவரது நண்பர் ரகுபதி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சின்னசாமி விசாரணை மேற்கொண்டார்.விசாரணையைத் தொடர்ந்து, விடுதியில் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பாக கவனக்குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, விடுதி காப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் கலைச்செல்வி, இரவு காவலர் சுமதி மற்றும் தூய்மை பணியாளர் ராதிகா ஆகிய 4 பேரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மாணவிகள் விடுதியின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படாத வகையில், அருகிலுள்ள அரசு விடுதிகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை தற்காலிகமாக இங்கு பணியமர்த்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அரசு மாணவிகள் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரும், அதனைத் தொடர்ந்து விடுதி பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
major shock safety female students harassment hostel while giving them alcohol Action taken against 4 people