பருவமழை எதிரொலி - போக்குவரத்து கழகத்திற்கு பறந்த அதிரடி உத்தரவு.!
Maintenance work in govt bus tn govt order
மழைக்காலம் ஆரம்பமானாலே பொதுமக்கள் பேருந்தில் அதிகளவு பயணம் செய்வார்கள். அப்படி செல்லும் போது அரசு பேருந்துகளில் மழைநீர் உள்ளே வருவதும், பொதுமக்கள் குடையை பிடித்த வண்ணம் பயணம் செய்வதும் இனையத்தில் வைரலாகி வரும்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற நிலையில், அரசு பேருந்துகளில் பராமரிப்பு அவசியம் என்று போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு பேருந்துகளில் உரிய பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும். பேருந்து உட்பகுதிகளில் மழைநீர் புகுவதை தடுக்க பணிமனைகளில் முறையான பராமரிப்பு அவசியம் .
மேற்கூரை, படிக்கட்டுகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும்" என்று போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Maintenance work in govt bus tn govt order