காதலியின் மீது சந்தேகம்.. பீறிட்டு தெறித்த இரத்தம்.. கயவனால் கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அந்தேரி லோக்கன்ட்வாலா பகுதியை சார்ந்தவர் சாகிர்கான். இவர் கடந்த இரன்டு வருடமாக, அங்குள்ள வணிக வளாகத்தில் பணியாற்றி பெண்மணியை காதலித்து வந்துள்ளார். 

மேலும், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதலனுக்கு காதலி மற்றொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தன்று, காதலியை நோட்டமிடும் பொருட்டு, அவர் பணிக்கு கிளம்பி செல்கையில் பின்னாலேயே பின்தொடர்ந்து சென்றுள்ளான். இதன்போது, பெண்மணி வாலிபர் ஒருவருடன் நின்று பேசவே, ஆத்திரமடைந்த கொடூரன் காதலியின் கைகளை பிடித்து இழுத்து பிளேடால் அறுத்துள்ளான். 

பின்னர் அங்கிருந்து தப்பி செல்லவே, இரத்தம் பீறிட்டு வெளியேறி அலறித்துடித்த பெண்மணியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில் உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் சாகிர்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Mumbai Andheri girl Murder attempt by his Love Boy due to Doubts 7 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal