டாஸ்மாக் விலைப்பட்டியலை நிரந்தரமாக வைக்க நீதிமன்றம் உத்தரவு..!!
MaduraiHC orders to keep Tasmac price list permanent
தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை பட்டியல் வெளியில் தெரியும்படி வைக்கவும், மதுபானம் வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்தும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத மத்திய, மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மற்றும் சத்யநாராயண அமர்வு முன்பு நடந்த விசாரணையின் அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் டாஸ்மாக்கலைகளில் விலை பட்டியல் மற்றும் டாஸ்மாக் கடைகளில் மது அருந்துவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை இன்னும் நிறைவேற்றப்படாததால் மத்திய மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மகேஷ் என்பவர் தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர் மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் கடைகளில் வெளியே மது வாங்குபவருக்கு தெரியும்படி விலைப்பட்டியல் உள்ளதா என்பதை மத்திய அரசு வழக்கறிஞர்கள் குழு நேற்று ஆய்வு செய்தது.
இந்த ஆய்வு குறித்து இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கினை இன்று ஒத்தி வைத்தனர். அதன் அடிப்படையில் நேற்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளில் மத்திய வழக்கறிஞர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய வழக்கறிஞர் குழு ஆய்வு மேற்கொள்ளும் என்பதை அறிந்து டாஸ்மாக் கடைகளில் அவசர கதையில் தற்காலிகமாக விலைப்பட்டியல் வகிக்கப்பட்டதாகவும், நிரந்தரமாக விலைப்பட்டியல் டாஸ்மாக் கடைகளில் முன்பு தெரியும்படி வைக்கவில்லை எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மதுபானங்களின் விலைப்பட்டியல் டாஸ்மாக் நிர்வாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நிரந்தரமாக விலைப்பட்டியல் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.
English Summary
MaduraiHC orders to keep Tasmac price list permanent