நாளை டாஸ்மாக் கடைகளில் ரெய்டு.!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! குஷியில் குடிமகன்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளில் முறைப்படி விலை பட்டியல் அனைவருக்கும் தெரியும்படி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை பட்டியல் வெளியில் தெரியும்படி வைக்கவும், மதுபானம் வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்தும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத மத்திய, மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழகத்தில் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் 21 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களும் மதுபானத்திற்கு அடிமையாகுவதால் டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் எனவும், மது அருந்துவோருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் எனவும் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மற்றும் சத்யநாராயண அமர்வு முன்பு நடந்த விசாரணையின் அடிப்படையில் பிறப்பித்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாததால் மத்திய மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மகேஷ் என்பவர் தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர் மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் கடைகளில் வெளியே மது வாங்குபவருக்கு தெரியும்படி விலைப்பட்டியல் உள்ளதா என்பதை மத்திய அரசு வழக்கறிஞர்கள் குழு நாளை ஆய்வு செய்ய வேண்டும். விலைப்பட்டியல் இல்லாத டாஸ்மாக் கடைகள் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வு குறித்து நாளை மறுநாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். இதன் மூலம் நாளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளில் மத்திய வழக்கறிஞர்கள் குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MaduraiHC directs Central Bar Committee to probe Tasmac stores keep price list


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->