தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாத மருத்துவ கருவி.. மதுரை ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு.!!
Madurai Rajaji Govt Hospital Medical Equipment
மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில், குறட்டை காரணமாக ஏற்படும் காரணத்தினை கண்டறியும் கருவியானது நிறுவப்பட்டு இருக்கிறது. இந்த கருவியின் துவக்க விழாவில் கலந்துகொண்ட தலைமை மருத்துவ அதிகாரி சங்குமணி, பாலிசோம்னோகிராஃபி (Polysomnography) கருவியை பார்வையிட்டார்.
மதுரை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் செலவில் இக்கருவி வாங்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டைப்பிரிவு தலைவர் தினகரன், மருத்துவ கண்காணிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் அருள் சுந்தரேஸ்வர், இணை பேராசிரியர் தங்கராஜ் போன்றோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக பேராசிரியர் மற்றும் காது, மூக்கு, தொண்டைப்பிரிவு தலைவர் தினகரன் தெரிவிக்கையில், " தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் குறட்டை போன்றவற்றை கண்டறியவும், பரிசோதனை செய்யவும், அதற்கான காரணத்தை கண்டறியவும் இக்கருவி பயன்படுகிறது.

உடலின் எடை அதிகளவு கொண்டவர்கள், மூக்கடைப்பு கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம மற்றும் நுரையீரல் பாதிப்பு கொண்டவர்கள், இதய கோளாறு கொண்டவர்களுக்கு இக்கருவி மூலமாக பரிசோதனை செய்து, தொந்தரவுகளை சரி செய்யலாம்.
மதுரை மருத்துவமனையில் இக்கருவி இருப்பது ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக இப்பரிசோதனை செய்யப்படுகிறது. முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலமாகவும் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Rajaji Govt Hospital Medical Equipment