நல்லதம்பியின் நாணயமான செயல்.. சிறையில் கம்பி என்னும் சோகத்திற்கு உள்ளாகிய காவல் ஆய்வாளர்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. கடந்த 2017 ஆம் வருடத்தில் இவர் மீது அடிதடி வழக்கு இருந்துள்ளது. இது தொடர்பான குற்றப்பத்திரிகையில் நல்லதம்பியின் மகன் மற்றும் மருமகன் கமல் பாண்டியனின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. 

நல்லதம்பி தனது மகன் மற்றும் மருமகன் சம்பவத்தின் போது அந்த இடத்தில் இல்லை என்று கூறி, சட்டப்படியாக அவர்களின் பெயரை நீக்க செக்கானுரணி காவல் ஆய்வாளர் அனிதாவிடம் முறையிட்டுள்ளார். இருவரின் பெயரையும் நீக்க அனிதா ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரியவருகிறது. 

இந்த பணத்தை தவணை முறையில் செலுத்த பேசி முடிக்கப்பட்ட நிலையில், இலஞ்ச விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் முப்பதாயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நல்ல தம்பியிடம் வழங்கியுள்ளனர். 

இந்த பணத்தை நல்லதம்பி காவல் ஆய்வாளர் அனிதாவிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், காவல் ஆய்வாளர் அனிதாவை கையும் களவுமாக அதிரடியாக கைது செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் விசாரணைக்காக மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் அனிதா அடைக்கப்பட்டுள்ளார். 

இவ்வுளவு நாணயமான நல்ல செயலை செய்த நல்லதம்பி, அவரது மகன் மற்றும் மருமகன் சம்பவ இடத்தில் இல்லை என்று கூறியிருப்பதும் உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Lady Cop Anitha Arrest due to Bribery


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal