திடுக்கிடும் தகவல்: மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி என தருமபுரம் ஆதீனம் புகார் ..! - Seithipunal
Seithipunal


தருமபுரம் ஆதீனத்தின் சார்பில், சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நாளை (மே 3) தொடங்கி 05-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி என தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம், மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே ரவுண்டானாவில் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்திற்கு காரணம் அவரின் கார் மீது மற்றொரு கார் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மதுரை ஆதீனம் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.

இந் நிலையில் தருமபுரம் ஆதீனம் தமது சமூக வலைதள பக்கத்தில் விபத்து திட்டமிட்ட சதி என்று குற்றம்சாட்டிள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;

'சென்னை வந்துகொண்டிருந்த மதுரையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் காரினை பின்னே வந்து காரில் மோதியுள்ளனர். இது திட்டமிட்ட சதியாக தெரிகிறது. இறையருளால் ஆதீனகர்த்தர் உயிர் தப்பினார். காருக்கு சேதமாயிற்று என்ற விபரமறிந்த குருமணிகள் மதுரையாதீனத்துடன் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்தனர். இவ்வாறு தருமபுரம் ஆதீனம் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Atheenam car accident was a planned conspiracy says Dharmapuram Atheenam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->