தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்க வேண்டும் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று வெள்ளி ரத தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

"தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. ஆதீனங்களிலேயே பொற்கால அருள் ஆட்சி நடத்தும் தருமபுரம் ஆதீனத்திற்கு நான் அடிமை. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலுக்கு வந்துள்ளேன். அமைச்சர் பெயர் சேகர்பாபு, என்னுடைய பழைய பெயர் பகவதிபாபு. ஆதீனங்களை ஒன்று கூட்டிய பெருமை அமைச்சருக்குத்தான் சேரும்.

அதுமட்டுமல்லாமல், அமைச்சர் சிறப்பான முறையில் கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து வருகிறார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னதை அமைச்சர் சேகர்பாபு செய்து காட்டியுள்ளார். அவர் நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆட்சி வளர வேண்டும். மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியும், மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியும் இருக்க வேண்டும்.

தமிழை வளர்த்தது ஆதீனங்கள்தான். அதிலும் சம்பிரதாயங்களை பாதுகாத்தது தருமபுரம் ஆதீனம். தருமபுர ஆதீனம், அமைச்சர் சேகர்பாபு உடன் நெருங்கி பேசியதற்கு என்னை தி.மு.க.காரன் என்று முத்திரை குத்துகின்றனர். 

எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவன் நான். நல்ல காரியம் யார் செய்தாலும் பாராட்டுவேன். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றினார்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai adheenam press meet in thirukadaiyur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->