சீமான்-விஜயலட்சுமி வழக்கு || 11 அண்டு நிலுவையில் வைத்திருந்த காவல்துறையை வெளுத்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகி இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளித்தார். அதனை அடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏழு முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி குற்றம் சாட்டியதை அடுத்து அவருக்கு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் சீமான் ஆஜராகாத நிலையில் அவர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். இதற்கிடையே விஜயலட்சுமி திடீரென சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்றார். 

இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வளசரவாக்கம் போலீசார் அறிவுரை தீர்ந்திட நிலையத்தில் தனது மனைவியுடன் சீமான் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்ற நிலையில் 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காவல்துறையினருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MadrasHC questioned tnpolice why Seeman Vijayalakshmi caee life kept last 11years


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->