தமிழகத்தின் பல குடும்பங்களை நாசப்படுத்திய அதிபர் வீட்டில் அதிரடி ரெய்டு! - Seithipunal
Seithipunal


லாட்டரி மூலம் தமிழகத்தின் பல குடும்பங்களை நாசப்படுத்திய லாட்டரி அதிபர் மார்ட்டின், தற்போது வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, தொடியலூர் அடுத்த வெள்ளிக்கிணறு பகுதியில் அமைந்துள்ள மார்ட்டின் வீடு மற்றும் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.

உள்ளே நுழைந்தவுடன் வீட்டின் கதவுகளையும் மூடிய அதிகாரிகள், வீட்டில் இருந்தவர்களின் செல்போனையும் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.

பின்னர் அங்குள்ள ஒவ்வொரு ரூம் வாரியாக சென்று சோதனை செய்த அதிகாரிகள், மொத்த வீட்டையும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து, அங்கிருந்த ஆவணங்களைகைப்பற்றினர்.

மேலும் இந்த வீட்டின் அருகே செயல்பட்டு வந்த அலுவலகம் ஒன்றையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இது மட்டுமல்லாமல் காந்திபுரம் ஆறாவது வீதியில் உள்ள மார்டின் அலுவலகத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த வருமானவரித்துறை சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lottery martin IT Raid 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->