திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.!
local holiday announce to tiruvarur district
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துபேட்டையில் ஒவ்வொரு ஆண்டும் "ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா" நடத்தப்படுவது வழக்கம். மொத்தம் பதினான்கு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதில் மிக முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை காண வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர்.

இந்த நிலையில் இந்த சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு நாளை திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
மேலும், சனிக்கிழமை வாக்காளர் சேர்க்கை முகாம் நடக்க இருப்பதனால், சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையினால் பள்ளிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
English Summary
local holiday announce to tiruvarur district