செங்கல்பட்டு | ஓட்டையை போட்டு ஆட்டையை போட்ட தீவிர டாஸ்மாக் மது வெறியன் செய்த சம்பவம்!
liquor bottles robbery Tasmac shop
செங்கல்பட்டு, சித்தாமூர் அருகே பழவூரில் உள்ள டாஸ்மார்க் மது கடையில் நேற்றிரவு விற்பனை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.
இன்று அதிகாலை மது கடையின் பின்பக்க சுவற்றில் துளை போட்டிருப்பதை வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அப்பகுதியில் மது பாட்டில்கள் சிதறி உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தன. பின்னர் இது குறித்து சித்தாமூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மது கடையின் பின்பக்க சுவற்றில் மர்ம நபர்கள் துளை போட்டு கடையின் உள்ளே புகுந்து மது பாட்டில்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் வெளியே எடுத்து வந்த சில பாட்டில்களை கொண்டு செல்ல முடியாததால் அதனை உடைத்தும் பெட்டியில் ஆங்காங்கே வைத்து விட்டோம் மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

மேலும் கடையில் 2 நாள் மது பாட்டில்கள் விற்பனை செய்த ரூ. 3 லட்சம் பணம் லாக்கரில் இருந்ததால் அதனை உடைக்க முடியாமல் மது பாட்டில்களை மட்டும் மர்ம நபர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
liquor bottles robbery Tasmac shop