கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Life sentence for the accused in the murder case Courts shocking verdict
2025-ம் ஆண்டில் இதுவரை திருநெல்வேலியில் 17 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, ஒரு நபருக்கு மரண தண்டனையும், 60 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மானூர், உக்கிரன்கோட்டை பகுதியில் பணப் பிரச்சினை காரணமாக மகாராஜன் என்பவர் அதே ஊரைச் சார்ந்த சண்முகசுந்தரம் என்கின்ற சின்னையா என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில், குற்றவாளியான மகாராஜனுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி செல்வம் இன்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.
அப்போது தீர்ப்பில் கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், மேற்சொன்ன தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. , போலீஸ் இன்ஸ்பெக்டர் , மானூர் காவல்துறையினர், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 17 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 60 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 20 நபர்கள் சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
English Summary
Life sentence for the accused in the murder case Courts shocking verdict